பாரதிராஜாவுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த சூர்யா !

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது .

மேலும் கஞ்சா பூ கண்ணால என்கிற பாடலின் ப்ரோமோவும் வெளியானது . இந்நிலையில் விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை 2டி நிறுவனம் அறிவித்து இருந்தது .வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் விருமன் என்று தெரிவித்து இருந்தது 2டி நிறுவனம் . இந்நிலையில் கோப்ரா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முழுவதமாக நிறைவடையாமல் இருப்பதால் கோப்ரா படம் விருமன் படம் வெளியாக இருந்த தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

இதனால் விருமன் படம் ஆகஸ்ட் மாதம் 12 -ஆம் தேதி வெளியாக இருக்கிறது . விருமன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது . இந்த விழாவில் பாரதிராஜா கலந்துக்கொண்டார் . விழாவில் நடிகர் சூர்யா பற்றி பேசிய பாரதிராஜா ஆயுத எழுத்து படப்பிடிப்பின் பொழுது நான் ஒரு காட்சியில் நடித்த போது நடிகர் சூர்யா அதை பார்த்து விட்டு நீங்க கொடுத்த அந்த முக பாவனை நன்றாக இருக்கிறது அதை மாத்த வேண்டாம் என்று எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தார் சூர்யா . நான் அப்பொழுது இன்னும் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கு என்று உணர்ந்தேன் என்று பேசினார் பாரதிராஜா .

Share.