நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ‘க/பெ.ரணசிங்கம்’… பாராட்டி ட்வீட் போட்ட சூர்யா!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படம் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி OTT-யில் ரிலீஸானது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம். இந்த படத்தை OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் பார்க்க பிரத்யேகமாக ரூ.199 பணம் செலுத்த வேண்டுமாம்.

தற்போது, இந்த படம் தொடர்பாக டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா ட்விட்டரில் “அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ‘க/பெ.ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜிப்ரான், பவானிஸ்ரீ, KJR ஸ்டுடியோஸ் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.

Share.