சூர்யா – விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ்… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!

பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி ரிலீஸானது ஆந்தாலஜி வெப் சீரிஸான ‘நவரசா’. இதில் ஒன்பது குறும்படங்கள் இருந்தது. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்த ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற குறும்படத்தில் சூர்யா, பிரயாகா மார்ட்டின் நடித்திருந்தனர். இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கியிருந்த ‘எதிரி’ என்ற குறும்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் நடித்திருந்தனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த ‘பீஸ்’ என்ற குறும்படத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் நடித்திருந்தனர். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்த ‘ப்ராஜெக்ட் அக்னி’ என்ற குறும்படத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா நடித்திருந்தனர். இயக்குநர் ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியிருந்த ‘இன்மை’ என்ற குறும்படத்தில் சித்தார்த், பார்வதி நடித்திருந்தனர். இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியிருந்த ‘சம்மர் ஆஃப் 92’ என்ற குறும்படத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு நடித்திருந்தனர்.

இயக்குநர் வஸந்த் இயக்கியிருந்த ‘பாயசம்’ என்ற குறும்படத்தில் டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகினி நடித்திருந்தனர். இயக்குநர் சர்ஜுன் இயக்கியிருந்த ‘துணிந்த பின்’ என்ற குறும்படத்தில் அதர்வா, கிஷோர், அஞ்சலி நடித்திருந்தனர். நடிகர் அரவிந்த் சாமி இயக்கியிருந்த ‘ரௌத்திரம்’ என்ற குறும்படத்தில் ரித்விகா, ரமேஷ் திலக், ஸ்ரீராம் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் மணிரத்னம் – ஜெயந்திரா இணைந்து தயாரித்திருந்தனர். தற்போது, இவ்வெப் சீரிஸின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Share.