ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன் . இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் இணைந்து தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது . தெலுங்கு நடிகை கீர்த்தி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

பாலாவின் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தை கலைப்புலி.S.தாணு தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது . இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் டி.ஜே.ஞானவேல் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஜெய்பீம் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது . ஆனால் இந்த படம் ஓ.டி.டியில் வெளியானது ஆனால் இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் அடுத்த படம் திரையரங்கில் வெளியாக தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது . வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தாமதமாக தொடங்க நேரிட்டால் இந்த படம் முதலில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

Share.