கமலுடன் நடித்தது பற்றி பேசிய சூர்யா !

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் ,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்‌.மேலும் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருந்தார் . சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து உள்ளது . திரையரங்கில் சூர்யா வரும் காட்சி அரங்கமே அதிரும்படியாக உள்ளது .

மேலும் நடிகர் சூர்யா விக்ரம் படத்தின் மூன்றாவது பாகத்தில் முழுவதுமாக வருவார் என்று கூறப்படுகிறது.நேற்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் பலர் இந்த படத்தை புகழ்ந்து வருகின்றனர் . விஜய் சேதுபதி , பஹத் பாசில் , நரைன் என அனைவரும் அவர்களது நடிப்பை சிறப்பாக தந்துள்ளனர் . அனிருத்தின் இசை படத்திற்கு மிகுந்த வலு சேர்த்துள்ளது .

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் . மேலும் நடிகர் சூர்யா விக்ரம் படத்திற்காக சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது . நடிகர் சூர்யா நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் . அவருடன் இணைந்து நடித்து இருப்பது கனவு நினைவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார் . அவர் செய்துள்ள இந்த ட்வீட் தற்பொழுது வைரலாகி வருகிறது .

Share.