நாளை ரிலீஸாகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’… இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடித்துள்ளார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. படத்தை நாளை (மார்ச் 10-ஆம் தேதி) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையும் ரூ.62 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், இப்படம் உலகளவில் ரூ.121 கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Share.