நடிகை ஜோதிகாவுக்கு நடிகர் சூர்யா வாங்கி கொடுத்த முதல் கிஃப்ட் என்ன தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா, 1997-ஆம் ஆண்டு ரிலீஸான ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் வஸந்த் இயக்கியிருந்தார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ‘தளபதி’ விஜய்யும் நடித்திருந்தார்.

‘நேருக்கு நேர்’ படத்துக்கு பிறகு ‘காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ப்ரண்ட்ஸ், நந்தா, உன்னை நினைத்து, ஸ்ரீ, மௌனம் பேசியதே’ என செம பிஸியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் சூர்யா. இவரின் கேரியரில் ‘பேரழகன், கஜினி, மாற்றான்’ போன்ற படங்களில் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களில் வலம் வந்திருந்தார்.

இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 2006-ஆம் ஆண்டு பிரபல நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நடிகை ஜோதிகா கொடுத்த ஒரு பேட்டியில் “சூர்யா எனக்கு வாங்கி கொடுத்த முதல் கிஃப்ட் பிளாட்டினம் செயின் மற்றும் கொலுசு” என்று கூறியுள்ளார்.

Share.