சூர்யா வக்கீலாக நடிக்கும் ‘ஜெய் பீம்’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸும் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, த.செ.ஞானவேல் இயக்கும் படம் என மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் த.செ.ஞானவேல் இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கு ‘ஜெய் பீம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’-டே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், இன்று (ஜூலை 23-ஆம் தேதி) சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. சூர்யா வக்கீலாக நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Share.