சூர்யா – த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் ‘ஜெய் பீம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம்.

சூர்யா வக்கீலாக நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் என்பதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை ரிலீஸ் செய்தனர்.

இந்த போஸ்டர்ஸ் சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தை வருகிற நவம்பர் மாதம் 2-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.