சூர்யா – ஹரி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சிங்கம் 2’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இவ்விரண்டு படங்கள் மட்டுமில்லாமல் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சூர்யா.

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சிங்கம் 2’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். மேலும், முக்கிய ரோல்களில் ஹன்ஷிகா, டேனி சபானி, ரகுமான், விவேக், சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.136 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.