சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ … வெளியானது எடிட்டிங் போது நீக்கப்பட்ட 2 காட்சிகள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்து சமீபத்தில் OTT-யில் ரிலீஸான படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ண குமார், காளி வெங்கட், அச்யூத் குமார், ஞானசம்பந்தம், வினோதினி வைத்யநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆர்.எஸ்.சிவாஜி, ‘பூ’ ராமு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். தற்போது, இப்படத்தின் எடிட்டிங் போது நீக்கப்பட்ட இரண்டு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு நீக்கப்பட்ட காட்சிகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.