சூர்யா – வெற்றிமாறன் காம்போவில் ‘வாடிவாசல்’… அதிக விலைக்கு டீல் பேசிய பிரபல நிறுவனம்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’ என மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு (2020) ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன்.

Suriya Objects The Amendment Of Cinematograph Act

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.98 கோடியாம். இதில் சூர்யாவின் சம்பளம் – ரூ.28 கோடி, வெற்றிமாறனின் சம்பளம் – ரூ.20 கோடி என்று சொல்லப்படுகிறது. 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், இதன் டைட்டில் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். தற்போது, இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸை அதிக விலைக்கு ‘கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.