சூர்யா – வெற்றிமாறன் காம்போவில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் ஷூட் ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.98 கோடியாம். இதில் சூர்யாவின் சம்பளம் – ரூ.28 கோடி, வெற்றிமாறனின் சம்பளம் – ரூ.20 கோடி என்று சொல்லப்படுகிறது. 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், நேற்று (மார்ச் 20-ஆம் தேதி) இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.