சூர்யா – கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘வாரணம் ஆயிரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது.

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வாரணம் ஆயிரம்’. இந்த படத்தில் சூர்யா அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன் இதனை இயக்கியிருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.47.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.