“எனது செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை”… பிரபல இயக்குநரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு டாப்சி சொன்ன காரணம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்சி பன்னு. 2011-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆடுகளம்’ என்ற படம் தான் டாப்சி பன்னுக்கு வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ் படம். ‘ஆடுகளம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை டாப்சிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி’ என தமிழ் படங்கள் குவிந்தது. டாப்சி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து, அங்கையும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

இப்போது நடிகை டாப்சி பன்னு நடிப்பில் தமிழ் மொழியில் இரண்டு படங்களும், ஹிந்தி மொழியில் நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், டாப்சி மீடியாவுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவரிடம் “பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ளவில்லை?”என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்சி “அந்த ஷோவில் கலந்து கொள்ளும் அளவிற்கு எனது செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை” என்று கூறியுள்ளார்.

Share.