தமன்னாவின் ’11th ஹவர்’ வெப் சீரிஸ்… வெளியானது சூப்பரான டீசர்!

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது. தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, தமன்னா நடிப்பில் ஆறு படங்கள் மற்றும் ‘நவம்பர் ஸ்டோரி’ தமிழ் வெப் சீரிஸ், ’11th ஹவர்’ (11th Hour) தெலுங்கு வெப் சீரிஸ் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ’11th ஹவர்’ வெப் சீரிஸை இயக்குநர் பிரவீன் சட்டரு இயக்குகிறார். இன்று இதன் டீசரை தமன்னா ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இவ்வெப் சீரிஸை ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.