பிரபல VJ ஆனந்த கண்ணன் காலமானார்… வருத்தத்தில் ரசிகர்கள்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சன் மியூசிக்கில் பிரபல VJ-வாக இருந்தவர் ஆனந்த கண்ணன். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் ‘அதிசய உலகம், இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த VJ-வும், நடிகருமான ஆனந்த கண்ணன், நேற்று (ஆகஸ்ட் 16-ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.