வெளியானது அதிதியின் குத்து டான்ஸ் வீடியோ !

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

மேலும் கஞ்சா பூ கண்ணால, மதுர வீரன் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .முதலில் இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருந்தது . ஆனால் வேறு சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வெளியிடப்பட்டது . இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக நடித்து இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . விருமன் படத்தில் நடிகை அதிதி ஷங்கரின் நடனம் ரசிகர்களை மிகவும் பாராட்டப்பட்டது . அந்த வகையில் அதிதிக்கு இரண்டு நிமிட குத்து நடன காட்சி இருந்தது . படத்தில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது .இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி தற்போது வலையொளியில் வெளியாகி உள்ளது .

Share.