ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸானது ‘உனக்கான உலகம்’ பாடல் வீடியோ!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும், மதுபாலா, சமுத்திரக்கனி, அரவிந்த் சாமி, நாசர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி கங்கனா ரனாவத்தின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்தனர். படத்தை வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் ‘உனக்கான உலகம்’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

 

Share.