தளபதி 66 படத்தில் இணைந்த பிரபலம்

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான பின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார் . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் . இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்யின் தந்தையாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் நடிகர் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது இந்த தகவலை மைக் மோகன் உண்மை இல்லை என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் லேசா லேசா , இயற்கை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஷ்யாம் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் நடிகர் ஷாம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடிகர் விஜய்யின் 66-வது படத்தில் நடிக்க இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதனால் அவர் தளபதி 66 படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

Share.