தளபதி 66 அப்டேட்டை கொண்டாடாத ரசிகர்கள்.

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் , மலையாளம் , என்று பல மொழிகளில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா . இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னதாகவே தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் .

ராஷ்மிகா எப்பொழுது தமிழில் படம் நடிப்பார் என்று தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர் . தமிழ் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா . இதனை தொடர்ந்து பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படத்தில் நடித்து அசத்தியிருந்தார் .

இதற்கு முன்னதாக சூரிய நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க இயக்குனர் பாண்டியராஜ் முயன்றார் . ஆனால் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு காரணமாக அந்த படத்தில் ராஷ்மிக்காவல் நடிக்க முடியவில்லை .
இந்த நிலையில் இன்று தனது 26வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ராஷ்மிகா . அவருக்கு பிறந்த நாள் பரிசு அளிப்பது போல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரீயேஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “தளபதி 66 ” படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவை அறிவித்துள்ளது படக்குழு .

இதன் காரணமாக ராஷ்மிகா மந்தண்ணாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தாலும் தளபதி விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடவில்லை . தளபதி 66 படத்துக்கு ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தப் பொழுதே விஜய் ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு எதிராக மீம்ஸ் போட்டார்கள் ஆனால் தற்பொழுது விஜய் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் அமைந்து இருக்கிறது இந்த அறிவிப்பு .

Share.