நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தமன் செய்த நெகிழ்ச்சியான செயல் !

இசையமைப்பாளர் தமன் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார் . இவர் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது விஜய் நடிக்கும் தளபதி 66 மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 20 ஆகிய படங்களுக்கும் இவர் தான் இசையமைக்கிறார் . மேலும் சின்னத்திரையில் தெலுங்கு இந்தியன் ஐடல் என்கிற ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக இருக்கிறார் இசையமைப்பாளர் தமன் .

இந்நிலையில் இந்தியன் ஐடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது .இந்த போட்டியில் கலந்து கொண்ட ரேணு குமார் என்பவர் தனது அற்புதமான குரல் வளத்தால் நடுவர்களான தமன் மற்றும் நடிகை நித்யா மேனன் மற்றும் அங்கு இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார் . இதனை தொடர்ந்து அவர் மேடையில் பேசும்போது கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக வருமானம் இல்லாமல் போய்விட்டது என்றும் தனது மகனின் படிப்பு செலவுக்கு கூட சிரமப்படுவதாகவும் தெரிவித்தார் .

இந்த விஷயத்தை கேட்ட இசையமைப்பாளர் தமன் உடனே மகனின் படிப்பு பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என்றும் இனி வருகின்ற அடுத்த 3 வருடத்திற்கான படிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று மேடையிலேயே உறுதி கொடுத்துள்ளார் . இசையமைப்பாளர் தமனின் இந்த செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது .

Share.