தங்கர்பச்சான் பதிவுக்கு பலரும் ஆதரவு !

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டு இருந்தார் . இந்த கருத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் பலரும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள் . அந்த வகையில் இயக்குனர் தங்கர்பச்சான் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார்.

தனது டிவீட்டரில் ‛‛இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும் போராடவும் வாதங்கள் புரிவதற்கும் வேறு எதுவுமே இங்கே இல்லையா? மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு ,தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதேபோல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?” என்றொரு கேள்வியை தங்கர்பச்சான் எழுப்பி உள்ளார். இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு அளித்து வருகிறார்கள் .

முன்னதாக தான் கூறிய கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றும் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்று கூறியுள்ளார் .

Share.