விரைவில் உருவாகவுள்ள தனிஒருவன் 2 திரைப்படம்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தனி ஒருவன்”. ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் அரவிந்த்சாமி மற்றும் நயன்தாரா நடித்திருந்தார்கள். அதுவரை ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த மோகன் ராஜா இந்த படத்தின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

இந்தப் படம் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மிக முக்கிய அம்சமாக அமைந்தது இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரமான சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம்தான்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 2021 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அரவிந்த் சுவாமி கதாபாத்திரத்தை தவிர அனைத்து நடிகர்களும் இந்தப்படத்திலும் இருப்பார்கள் என்றும் மோகன்ராஜா சில மாற்றங்களை ஜெயம்ரவியின் நண்பர்கள் கதாபாத்திரத்தில் செய்துள்ளார் என்றும் செய்தி வந்துள்ளது.

Share.