முன்னணி தென்னிந்திய நடிகைகள் பங்கேற்கும் “தி லெஜன்ட் ” இசை வெளியீட்டு நிகழ்ச்சி !

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . சரவணன் அருள் 10 ஜூலை 1970 இல் பிறந்தவர் . இவர் ஒரு வெற்றிகரமான பிரபல இந்திய தொழிலதிபராக திகழ்கிறார் . பிரபல ஷாப்பிங் கடைகளின் உரிமையாளர் இவர் . லெஜண்ட் சரவணா, சரவணா செல்வரத்தினம் மற்றும் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் என அவரது ஷாப்பிங் ஸ்டோர்ஸ் பெயரிடப்பட்டுள்ளது. இவரது தந்தை பிரபல தொழிலதிபர் சரவண செல்வரத்தினம்.

சரவணன் அருள் தனது சொந்த ஷாப்பிங் ஸ்டோர் விளம்பரத்திற்காக பிரபல நடிகைகள் ஹன்சிகா மோத்வானி மற்றும் தமன்னாவுடன் நடித்து பிரபலமடைந்தார். சரவணா ஸ்டோர்ஸின் விளம்பர வீடியோக்களில் பிரபல நடிகையுடன் நடித்ததற்காக ஆன்லைனில் இவர் ட்ரோல் செய்யப்பட்டார் . ஆனால் அது அவரையும் அவரது கடையையும் பிரபலமாக்கியது.

2019 ஆம் ஆண்டில், பெயரிடப்படாத கோலிவுட் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியது . தி லெஜெண்ட் என்ற அந்த படத்தின் பெயர் என்று உறுதியானது . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார் . இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வரும் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
இந்த விழாவில் பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா , மேலும் நடிகைகள் தமன்னா , ஹன்சிகா , ராய் லட்சுமி , ஷ்ரதா ஸ்ரீநாத் , ஸ்ரீ லீலா ,ஊர்வஷி ரௌட்டலா என பல முன்னணி நடிகைகள் பங்கேற்க உள்ளனர் . தென்னிந்தியா சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதால் பலர் ஆச்சர்யத்துடன் இதை பார்க்கிறார்கள் .

Share.