மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் . இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பத்தல பத்தல என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது . இந்நிலையில் போர் கொண்ட சிங்கம் என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது இன்று வெளியாகி உள்ளது .
விக்ரம் படத்தை விளமபர படுத்தும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார் அந்த வகையில் பேட்டி ஒன்றில் நீங்கில் முன்பு இயக்கிய படங்களில் ஏதேனும் குறைஇருப்பதாக கருதுகிறீர்களா அல்லது எதாவது மாற்றம் செய்வது என்றால் ஏதாவது இருக்குமா என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த லோகேஷ் ” மாநகரம் திரைப்படத்திற்கு முன்பு வேறு இயக்குனரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணிபுரிந்து இருந்தால் மாநகரம் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் கைதி திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் கூட கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்றும் மாஸ்டர் படத்தில் இரண்டாவது பாதிக்கு இன்னும் நேரம் எடுத்து எழுதி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் .
மேலும் விக்ரம் படத்தில் தற்பொழுது வரை என்னால் குறை சொல்ல முடியவில்லை ஆனால் சில வருடம் கழித்து பார்த்தால் விக்ரம் படத்திலும் குறை இருக்கலாம் என்று கூறியுள்ளார் .
Comments