திரையரங்கிற்கு திரும்பும் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மாறன் . இந்த படம் ஓ.டி.டியில் வெளியானது.கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷ் , மாளவிகா மோஹனன் ,ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர் . பெரிது எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிற படம் திருச்சிற்றமபலம் . மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்கி உள்ளார் . இவர் ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி , குட்டி , உத்தமபுத்திரன் படங்களை இயக்கி இருந்தார் . திருச்சிற்றமபலம் படத்தில் நித்யா , ராஷி கன்னா ,பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியீடுகிறார் .அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சில வருடங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் . இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட காலம் கழித்து தனுஷின் படம் திரையரங்கில் வெளியாக உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share.