ஒரே படம் தான்… இளம் ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்… ஷாக் மோடில் சக நடிகைகள்!

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியானது ஒரு ரொமான்டிக் படம். அறிமுக இயக்குநர் இயக்கிய இந்த படத்தில் புதுமுகங்கள் தான் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தமிழில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ஒருவர் தான் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டியிருந்தார்.

இப்படம் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதில் நடித்திருக்கும் ஹீரோயினுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. இந்த படத்துக்கு ரூ.6 லட்சம் தான் சம்பளம் வாங்கியிருந்தார் ஹீரோயின். இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே வெளியான டீசரில் ஹீரோயினுக்கு கிடைத்த லைக்ஸை பார்த்து, பிரபல தெலுங்கு ஸ்டார் நடிக்கும் படத்தில் இவரை ஒப்பந்தம் செய்தனர்.

அந்த படத்துக்கு ரூ.35 லட்சம் சம்பளமாம். தற்போது, தமிழ் / தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அந்த ஹீரோயின். தெலுங்கு ஹீரோ நடிக்கும் இந்த படத்தை கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி படம் எடுக்கும் தமிழ் இயக்குநர் தான் இயக்குகிறாராம். இதில் ஹைலைட் என்னவென்றால், படத்தின் ஹீரோயினுக்கு இதில் நடிப்பதற்காக ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதை கேட்ட சக இளம் நடிகைகள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.