டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை !

2002-ஆம் ஆண்டு வெளியான படம் ரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின் . இந்த படத்தை இயக்கியவர் லிங்குசாமி . இதற்கு முன்னதாக 2001-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான சூத்ரதாரன் எனும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் மீரா ஜாஸ்மின் .

சில வருடங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள மகள் என்கிற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் டீனேஜ் பெண்ணிற்கு தாயாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .


பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்த படம் வரும் ஏப்.,29ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவரிடம் இப்படி ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறீர்களே உங்களுக்கு இமேஜ் பற்றிய கவலை இல்லையா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த மீரா ஜாஸ்மின், “இதேபோன்று 17 வருடங்களுக்கு முன்பு நடிகை ஊர்வசி அச்சுவிண்டே அம்மா என்கிற படத்தில் எனக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்ட போது அவரிடமும் இதேபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யன் அந்திக்காடு இயக்கும் படம் என்றால் மீரா ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல நடிகை சுகுமாரிக்கு கூட அம்மாவாக நடிக்கவும் நான் தயார் என்று கூறினார் ஊர்வசி.. இயக்குனர் சத்யன் அந்திக்காடு மீது அவர் வைத்திருந்த அதேபோன்ற நம்பிக்கையும் ஊர்வசி சொன்ன அந்த வார்த்தைகளும் தான் இப்போது ‘மகள்’ படத்தில் டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொள்ள காரணம்” என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் நடித்து கொண்டு இருக்கும் மீரா ஜாஸ்மின் தமிழிலும் விரைவில் நடிக்க வேண்டும் என்பது தமிழ் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது .

Share.