மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் முதன்மையானவராக விளங்கியவர் ஆச்சி மனோரமா. இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாது பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென பெரிய மரியாதையும் புகழையும் சேர்த்தவர்.

இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர் நடிகைகளும் இவர் பணிபுரிந்துள்ளார்.

இவ்வாறு சிறந்த நடிகையாக விளங்கிய இவரின் சினிமா வாழ்க்கை குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வாழ்க்கை வரலாற்று கதை ஒன்றை எடுப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து அந்த படம் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுத்தால், அதில் தனக்கு நடிப்பதற்கு விருப்பம் உள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பலரும் அப்படி ஒரு சிறந்த நடிகரின் வாழ்க்கை வரலாற்று திரைப் படத்தில் நீங்கள் நடிப்பதா போன்ற நெகட்டிவ் கமெண்ட்களையும் குறிப்பிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.