விஜய்யின் ‘பீஸ்ட்’… செல்வராகவனுக்கு முன்பு அந்த வில்லன் ரோலில் நடிக்கவிருந்த இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். கடந்த ஜூன் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தின் செகண்ட் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது.

தற்போது, 3-வது ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் வில்லன் ரோலில் நடிக்க இயக்குநர் மிஷ்கினை தான் இயக்குநர் நெல்சன் அணுகினார் என்று தகவல் கிடைத்துள்ளது. மிஷ்கின் அவர் இயக்கும் புதிய படமான ‘பிசாசு 2’வில் பிஸியாக பணியாற்றி வந்ததால் மட்டுமே, ‘பீஸ்ட்’டில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனதாம்.

Share.