அடேங்கப்பா அந்த ஹீரோவுக்கு ரூ.50 கோடி சம்பளமா?… ஷாக்கான மற்ற ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாரின் மருமகன் தான் அந்த ஹீரோ. இவரது அப்பா, அண்ணன், மனைவி ஆகியோர் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த ஹீரோ நடிப்பில் பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த லிஸ்டில் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கில படமும் உள்ளது.

கடந்த வாரம், அந்த ஹீரோ தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ஒருவர் தான் இயக்க உள்ளாராம். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாம்.

This Hero Charges 50 Cr For New Film 1

முன்னணி நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ரௌடி பேபி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது, இந்த படத்தின் பட்ஜெட் ரூ.120 கோடி என்றும், ஹீரோவுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதை கேட்ட மற்ற ஹீரோக்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.