மாமன்னன் படத்தில் இதுதான் வடிவேலுவின் கதாபாத்திரம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் நடிகர் வடிவேலு. நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு . இந்நிலையில் நடிகர் வடிவேலு தற்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் . இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்று பெயர் வைப்பதாக இருந்தது ஆனால் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த படத்திற்கு ஏற்கனவே அந்த பெயரை வைத்ததால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று மாற்றி விட்டனர் .

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார் .ஷிவாங்கி மற்றும் ஷிவானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது .
இந்த படத்தின் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஒரு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .

இந்நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . வடிவேலு நகைச்சுவை காட்சிகளில் மட்டுமல்ல துணை நடிகராகவும் பல படங்களில் நடித்து இருக்கிறார் . எனவே மாமன்னன் படத்திலும் குணசித்ர நடிகராக வடிவேலு நடித்து இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

Share.