அடேங்கப்பா… விக்ரமின் ‘மகான்’ பட டைட்டிலுக்காக இத்தனை லட்சம் செலவு செய்தாரா தயாரிப்பாளர்?

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் (விக்ரம் 60) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. நேற்று இப்படத்துக்கு ‘மகான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்திருந்தனர்.

தற்போது, இந்த டைட்டிலுக்கு பின்னணியில் உள்ள ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ஒரு தயாரிப்பாளர் இதே டைட்டிலை அவர் தயாரிக்கும் புதிய படத்துக்காக பதிவு பண்ணி வைத்திருந்தாராம். இதை கேள்விப்பட்ட ‘விக்ரம் 60’ படத்தின் தயாரிப்பாளர், இந்த டைட்டிலை ரூ.7 லட்சம் கொடுத்து அத்தயாரிப்பாளரிடம் இருந்து கைப்பற்றினாராம்.

Share.