ஒ.டி.டியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரவுடி தான் . இந்த படம் உருவாகி கொண்டு இருந்த பொழுதே விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராக்கும் காதல் ஏற்பட்டது . இந்த படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணியில் நீண்ட நாட்களாக படம் வரவில்லை . இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார் .

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது .ஆனால் இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு அறிவிக்கவில்லை .

ஆனால் தற்போது விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது . மேலும் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை கொடுத்து இருந்தார்கள் .

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் இவர்களது திருமண நிகழ்ச்சியை வாங்கியுள்ளது என்றும் இந்த திருமண விழாவை ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுக்க உள்ளார் என்ற செய்தியும் வெளியாகிய இருக்கிறது .இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்ச்சியை ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Share.