நயன்தாராவை சந்தித்த பிரபல நடிகை !

போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்றது.கடற்கறை பகுதியில் உள்ள ரிசார்ட் அது. திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருந்தனர் . திருமணத்திற்கு பிறகு இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு சென்று இருந்தனர் . தற்பொழுது இந்த ஜோடி மும்பையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாராவுடன் பிரபல நடிகை மலைக்கா அரோரா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மலைக்கா பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்… உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 1998-இல் வெளியான “உயிரே” என்ற தமிழ் படத்தில் இடம்பெற்ற “தக்க தைய்ய தைய்யா” பாடலின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் மலைக்கா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.

Share.