லிங்குசாமியை வெளியே போ என்று சொன்ன சூப்பர்ஸ்டார்

2001-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ஆனந்தம். இந்த படம் லிங்குசாமி அவர்களின் முதல் படம் . நடிகர்கள் மம்மூட்டி , முரளி , அப்பாஸ் , நடிகைகள் தேவயானி , ரோஜா , சினேகா ஆகியோர் நடித்து இருந்தனர் . எஸ்.எ.ராஜ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . முற்றிலும் குடும்பத்தில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்து இருந்தது.

இந்த படத்தை ஆர்.பி.சவுத்ரி அவர்கள் தயாரித்து இருந்தார் .175 நாட்கள் இந்த படம் திரையரங்கில் ஓடி சாதனை செய்தது . நடிகர் மம்மூட்டி அவர்களின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இந்த படம் அமைந்தது . 2001-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது .

இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி டப்பிங் பேச மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் . இயக்குனர் லிங்குசாமி திரும்ப திரும்ப மம்மூட்டியை பேச வைத்துள்ளார் . இதனால் கடுப்பான மம்மூட்டி முதலில் நீ வெளிய போ அப்பொழுது தான் எனக்கு சரியாக டப்பிங் பேச வரும் என்று கூறி உள்ளார் . இதனால் லிங்குசாமி வெளியே போவது போல் நடித்து விட்டு மீண்டும் டப்பிங் ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டார் லிங்குசாமி . லிங்குசாமி வெளியே சென்றப்பொழுது மம்மூட்டி பேசிய டப்பிங் வசனத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார் லிங்குசாமி .

Share.