‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ்

நடிகர் விதார்த் , லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, கருணாகரன், மசூம் சங்கர் மற்றும் பலர் நடித்த படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்த படத்தை இயக்கி இருக்கிறவர் சக்திவேல் . இந்த படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்கிற தலைப்பு தன்னுடைய அப்பாவின் புகழ் பெற்ற நாவலின் தலைப்பு. அதை படத்திற்காக வைக்க என்னிடம் அனுமதி பெறவில்லை என மறைந்த முன்னணி எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மகன் சூர்யா பாலகுமாரன் குற்றம் சாட்டியிருந்தார்.இதனை தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி நிறுவனத்துக்கும் , ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு பாலகுமாரன் குடும்பத்தின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .

இதையடுத்து இன்று காலை இயக்குனர் எஸ் பி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா இருவரும் பாலகுமாரனின் வீடு தேடி சென்று அவர்களது விளக்கத்தை கொடுத்து, மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதையடுத்து இந்த பிரச்னையை சுமுகமாக பேசி முடித்துக் கொண்டதாக பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மகன் சூர்யா இயக்குனர் அட்லீயிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.