50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி… செப்டம்பரில் 4 புதிய படங்கள் ரிலீஸ்!

‘கொரோனா’ பிரச்சனையால் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் சமீபத்தில் மூடப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் 23-08-2021 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்களும், திரையரங்க உரிமையாளர்களும், ரசிகர்களும் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி – இயக்குநர் சிவா காம்போவில் உருவாகும் ‘அண்ணாத்த’ படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், அருண் விஜய்யின் ‘பார்டர்’, ஆர்யாவின் ‘அரண்மனை 3’, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’, ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய நான்கு படங்களும் அடுத்த (செப்டம்பர்) மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share.