தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் 13 ஹீரோயின்ஸ்!

தமிழ் சினிமாவில் பல ஹீரோயின்கள் வலம் வருகிறார்கள். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் அவரவர் நடிக்கும் படங்களை பொருத்து அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகும். அதேபோல், அவர்களுடைய சம்பளமும் அப்படங்களின் வெற்றி தோல்வியை வைத்து நிர்ணயிக்கப்படும். இப்போது, தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் 13 ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ…

1.நயன்தாரா :

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல், பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

2.அனுஷ்கா ஷெட்டி :

திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீபத்தில், அனுஷ்கா ஷெட்டியின் புதிய திரைப்படமான ‘சைலன்ஸ்’ ‘அமேசான் ப்ரைம்’-யில் வெளியானது. இவர் ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

3.ஸ்ருதி ஹாசன் :

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’ (தமிழ்), ‘வக்கீல் சாப்’ (தெலுங்கு), ‘சலார்’ (கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

4.எமி ஜாக்சன் :

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் எமி ஜாக்சன். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் தான் எமி ஜாக்சன் நடித்து ரிலீஸான கடைசி படம். சமீபத்தில், எமி ஜாக்சன் ‘அந்தகன்’ என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று சொல்லப்பட்டது. இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

5.நித்யா மேனன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நித்யா மேனன். இப்போது, நித்யா மேனன் நடிப்பில் ‘கொலாம்பி’ (மலையாளம்), ’19 (1)(a)’ (மலையாளம்), ‘கமனம்’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம் / கன்னடம் / ஹிந்தி) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

6.சமந்தா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இப்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

7.காஜல் அகர்வால் :

திரையுலகில் பிரபல நடிகைககளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது, காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா’, தெலுங்கில் ‘மோசகல்லு, ஆச்சார்யா’ மற்றும் ஹிந்தியில் ‘மும்பை சகா’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

8.கீர்த்தி சுரேஷ் :

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘அண்ணாத்த, மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், குட் லக் சகி, ரங் தே, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா, வாஷி’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

9.தமன்னா :

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இப்போது, தமன்னா நடிப்பில் தெலுங்கில் ‘சீட்டிமார், ‘அந்தாதூன்’ ரீமேக், குர்துண்டா சீதகளம், F3, தட் இஸ் மகாலக்ஷ்மி’, ஹிந்தியில் ‘போலே சுடியான்’ என ஆறு படங்களும் மற்றும் ‘நவம்பர் ஸ்டோரி’ தமிழ் வெப் சீரிஸ், ’11th ஹவர்’ (11th Hour) தெலுங்கு வெப் சீரிஸ் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.1.75 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

10.த்ரிஷா :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இப்போது, த்ரிஷா நடிப்பில் ‘பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

11.ஸ்ரேயா சரண் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். இப்போது, ஸ்ரேயா சரண் நடிப்பில் ‘கமனம்’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம் / கன்னடம் / ஹிந்தி), ‘RRR’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம் / கன்னடம் / ஹிந்தி), தமிழில் ‘சண்டக்காரி, நரகாசூரன்’, ஹிந்தியில் ‘தட்கா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.1.50 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

12.ஹன்ஷிகா மோத்வானி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ஹன்ஷிகா மோத்வானி. இப்போது, ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் ‘மஹா, பார்ட்னர்’ மற்றும் தனுஷ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

13.ரகுல் ப்ரீத் சிங் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இப்போது, இவர் நடிப்பில் தமிழில் ‘அயலான், இந்தியன் 2’, ஹிந்தியில் ‘சர்தார் கா கிராண்ட்சன், அட்டாக், மேடே, தேங்க் காட்’, தெலுங்கில் இயக்குநர் க்ரிஷ் படம் என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

Share.