2021-ல் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

இந்த ஆண்டு (2021) திரையரங்குகளில் அதிக தமிழ் படங்கள் வெளியானது. இதில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் ரூ.300 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

2.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் ரூ.240 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

3.டாக்டர் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியான படம் ‘டாக்டர்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் ரூ.105 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

4.மாநாடு :

சிலம்பரசன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

5.கர்ணன் :

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் ரூ.63 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Share.