வெளியான முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.சர்கார் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.31.78 கோடி வசூல் செய்தது.

2.வலிமை :

அஜித் நடிப்பில் நேற்று (பிப்ரவரி 24-ஆம் தேதி) வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். நேற்று இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.31.50 கோடி வசூல் செய்தது
.
3.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.40 கோடி வசூல் செய்தது.

4.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு (2021) வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.24.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

5.பிகில் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிகில்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.24.5 கோடி வசூல் செய்தது.

Share.