5-வது முறையாக கைகோர்க்க ஆசைப்பட்ட இயக்குநர்… ட்விஸ்ட் வைத்த டாப் ஹீரோ!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகரின் இரண்டாவது மகனை வைத்து சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் அந்த இயக்குநர். அதன் பிறகு டாப் ஹீரோ ஒருவருடன் கைகோர்த்து தொடர்ந்து ‘V’ படங்களாக எடுத்து வந்தார். அதுவும் இரண்டல்ல, மூன்றல்ல மொத்தம் நான்கு படங்களுக்காக இதுவரை அந்த கூட்டணி இணைந்திருக்கிறது.

இதில் நான்காவதாக வெளியான அப்பா – மகள் சென்டிமென்ட் படமும் மெகா ஹிட்டானது. பின், அந்த இயக்குநர் டாப் ஸ்டாரை வைத்து ஆரம்பித்த ஒரு படம் பல சிக்கல்களால் ஷூட்டிங் தாமதமாகிக் கொண்டே போனது. ஆகையால், மீண்டும் ‘V’ சென்டிமென்ட்டை கையில் எடுக்கலாம் என்று ஆசைப்பட்ட இயக்குநர், அதற்காக ஒரு சூப்பர் கதையையும் ரெடி செய்து அந்த ஹீரோவிடம் சொல்லியிருக்கிறார்.

அக்கதை அந்த ஹீரோவுக்கும் பிடித்து விட, தான் இப்போது மறைந்த பிரபல நடிகையின் கணவர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறேன், அப்படம் முடிந்ததும் நாம் இணைந்து இந்த புதிய படத்தை துவங்கலாம் என கூறியிருந்தார். இப்போது அந்த படம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆனால், அந்த ஹீரோ அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் இணைந்தே அடுத்த படத்தையும் பண்ணலாம் என திடீர் ட்விஸ்ட் வைத்து விட்டாராம். இதனால், மீண்டும் இணையப்போகிறோம் என ரொம்ப எதிர்பார்த்து வெயிட் பண்ணிக் கொண்டிருந்த அந்த இயக்குநர் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆனாராம்.

Share.