நடிகை சமந்தாவின் புதிய படத்தில் அறிமுகமாகும் டாப் ஹீரோவின் மகள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது.

மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார். தற்போது, ‘சகுந்தலம்’ படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் மிக முக்கிய ரோலில் நடிக்க டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அல்லு அர்ஹா திரையுலகில் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம். இந்த தகவலை நடிகர் அல்லு அர்ஜுனே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கி வருகிறார். இதற்கு மணிசர்மா இசையமைத்து கொண்டிருக்கிறார்.

Share.