திருமணத்தை தள்ளிப்போடும் 36 வயது நடிகை… பயங்கர அப்செட்டில் பாய் ஃபிரண்ட்!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. ரௌடி பட இயக்குநரை காதலித்து வருவது இந்த நடிகை தான். இப்போது அந்த நம்பர் நடிகை – ரௌடி பட இயக்குநர் காம்போவில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இதில் மக்களுக்கு மிகவும் பிடித்த அந்த டாப் ஹீரோ நடிக்கிறார்.

இதில் இன்னொரு நடிகையும் நடித்து கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இது தவிர அந்த நம்பர் நடிகையின் நடிப்பில் இரண்டு தமிழ் படங்களும், ஒரு மலையாள படமும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ரௌடி பட இயக்குநர் இன்ஸ்டாகிராமில் அந்த நடிகையுடன் எடுத்துக்கொண்ட ஒரு ஸ்டில்லை வெளியிட்டதுடன் “விரலோடு உயிர் கூட கோர்த்து” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ஸ்டில்லில் அந்த நடிகையின் கையில் மோதிரம் இருந்ததால், இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதா? என்ற கேள்வி எழுந்தது. கடந்த வாரம் அந்த நடிகை பிரபல டிவி சேனலில் கொடுத்த பேட்டியின்போது “இது engagement ring தான்” என்று கூறியிருந்தார். ஆனால், திருமணம் எப்போது நடக்கப்போகிறது என்று அவர் சொல்லவில்லை. திருமணம் பற்றி அந்த ரௌடி பட இயக்குநரே அவரிடம் பல முறை கேட்டு விட்டாராம், ஆனால் அந்த நடிகையோ இதுவரை அதற்கு பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறாராம். இதனால் ரௌடி பட இயக்குநர் அப்செட்டில் இருக்கிறாராம்.

Share.