ரூ.4 கோடி சம்பளம்… ஆனா, இயக்குநர்களுக்கு அந்த மாதிரி கண்டிஷனை போடும் ஹீரோயின்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. விரல் வித்தை நடிகரின் ரொமான்டிக் படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமான இந்த நடிகை, அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார்.

இந்த நடிகைக்கு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. டாப் ஹீரோயினாக வலம் வரும்போதே பிரபல தெலுங்கு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது, இந்த நடிகை நடிப்பில் தமிழில் நம்பர் நடிகையுடன் இணைந்து நடிக்கும் படமும், ஹிந்தியில் வில்லியாக நடித்துள்ள வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், அந்த நடிகை கதை சொல்லப்போகும் இயக்குநர்களிடம் ஒரு கண்டிஷன் போடுகிறாராம். ஹீரோக்களுடன் டூயட் பாடி ஆடுவது போன்ற காட்சிகள் வைக்க வேண்டாம் என்று சொல்கிறாராம். ஏன்? என்று அதற்கு காரணம் கேட்டால், இப்போதிருக்கும் ஃபேன்ஸ் அந்த மாதிரி காட்சிகளுக்கு லைக்ஸ் போடுவதில்லை என்று சொல்கிறாராம். இந்த கண்டிஷனை கேட்ட ஒரு இயக்குநர் “உங்களுக்கு சம்பளம் மட்டும் ரூ.4 கோடி கேட்கிறீர்கள், ஆனால் ஹீரோவுடன் டூயட் ஆட மாட்டேன் என்று சொல்கிறீர்களே” என்று அந்த நடிகையிடம் சொன்னாராம்.

Share.