ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டி தீர்த்த முன்னணி இயக்குநர்… கேரவனில் கதறி அழுத இளம் நடிகை!

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியானது ஒரு ரொமான்டிக் படம். அறிமுக இயக்குநர் இயக்கிய இந்த படத்தில் புதுமுகங்கள் தான் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தமிழில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ஒருவர் தான் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டியிருந்தார்.

இப்படம் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதில் நடித்திருக்கும் ஹீரோயினுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. இப்போது, இந்த நடிகையின் நடிப்பில் மூன்று தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படம் தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ் மொழியிலும் உருவாகி வருகிறது.

தெலுங்கு ஹீரோ நடிக்கும் இந்த படத்தை கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி படம் எடுக்கும் தமிழ் இயக்குநர் தான் இயக்குகிறாராம். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, ஷூட்டிங்கில் ஒரு எமோஷனல் காட்சியில் ஹீரோயின் ஒழுங்காக நடிக்காததால் அதிக டேக்ஸ் போனதாம். இதனால் கடுப்பான இயக்குநர், படக்குழுவினர் முன்னிலையில் ஹீரோயினை திட்டி தீர்த்து விட்டாராம். இதனைத் தொடர்ந்து ஹீரோயின் கேரவனுக்கு சென்று அழுததாக டோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

Share.