ரூ.10 கோடி நஷ்டம்… முன்னணி ஹீரோ எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த நடிகர். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான இந்த நடிகருக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் சில படங்களில் கிடைத்தது.

அதன் பிறகு ஹீரோவாக அசத்தி டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். கடந்த வாரம் இவர் நடிப்பில் ஒரு புதிய படம் திரையரங்குகளில் ரிலீஸானது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இயக்குநர் திடீரென மரணமடைந்தார். இப்படத்தில் டாப் ஹீரோ ஒருவரின் மகள் தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தை அந்த ஹீரோவே அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஃப்ளாப்பானது. இதனால் அந்த ஹீரோவுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். ஆகையால், “இனிமே நான் படம் தயாரிக்கப்போவதில்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறேன்” என்று அந்த ஹீரோ அவரது நண்பர்களிடம் சொன்னதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.