‘ரஜினி 169’-ஐ இயக்கும் நெல்சன்… படத்துக்கு இசை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் தான் இயக்க உள்ளார். ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் இப்போது ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், ரஜினியை சந்தித்து இயக்குநர் நெல்சன் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். தற்போது, இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத (பிப்ரவரி) இறுதியில் வெளியாகுமாம்.

Share.