ரூ.40 கோடி சம்பளம்… ஆனா, தயாரிப்பாளர் போட்ட 2 கண்டிஷன்களால் புலம்பும் டாப் இயக்குநர்!

சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் இந்த இயக்குநரின் பெயர் தான் டக்கென நம் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு தன் படங்களில் ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாய் எடுக்க செலவு ஆகாதா? அதனாலையே இப்போது இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் யோசித்து வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாப் ஹீரோவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்குநரின் பார்ட் 2 படமும் பல சிக்கலில் சிக்கி அடுத்து எப்போது தொடங்கும் என்றே தெரியாமல் பாதியில் நிற்கிறது.

இதற்கிடையில் மாஸ்டர் ப்ளான் போட்ட அந்த இயக்குநர், டோலிவுட்டுக்கு பறந்து அங்குள்ள டாப் ஹீரோ மற்றும் டாப் தயாரிப்பாளரிடம் ஒரு கதை சொன்னார். அவர்களும் அந்த கதை பிடித்ததால் ஓகே சொல்லி, அந்த இயக்குநருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசி, ரூ.10 கோடி அட்வான்ஸும் கொடுத்து விட்டார்கள். ஆனால், அந்த தெலுங்கு தயாரிப்பாளர் போட்ட இரண்டு கண்டிஷன்கள் தான் ஹைலைட்.

படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு முன்பே பவுண்ட் ஸ்க்ரிப்ட் கொடுக்க வேண்டும் என்றும், படத்தை ஆறு மாதத்திற்குள் சொன்ன பட்ஜெட்டிற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ஸ்ட்ரிக்ட்டாக அந்த இயக்குநருக்கு கண்டிஷன்கள் போட்டுள்ளாராம். பொதுவாக அந்த இயக்குநர் தமிழில் ஒரு படத்தை வருடக் கணக்கில் எடுப்பது தான் வழக்கம். ஆனால், தெலுங்கில் இப்படி போடுற கண்டிஷன்களுக்கு எல்லாம் ஓகே சொல்லும் அளவிற்கு நான் சென்றுவிட்டனே என்று நண்பர்களிடம் புலம்புகிறாராம்.

Share.